நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்துக்கு 2ஆம் இடம்

புது டெல்லி:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்களுக்கான தேசிய விருதுப் பட்டியலில் தமிழகத்துக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளது.

100 ஸ்மார்ட் சிட்டி நகரங்களை உருவாக்குவதற்கான திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் சிறப்பாகச் செயல்படும் நகரங்கள், மாநிலங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான விருதுகளை  நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதில், சிறந்த மாநிலங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தையும், தமிழகம் 2வது இடத்தையும், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகியவை இணைந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

சிறந்த நகரங்களுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குஜராத்தின் சூரத் 2வது இடத்தையும், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset