நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்க இலங்கை பரிசீலனை

கொழும்பு:

சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்க இலங்கை பரிசீலித்து வருகிறது. இலங்கைக்கு இந்தக் கப்பல் வருகையைத் தடுப்பது இந்தியாவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

இலங்கையில் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தி வைப்பதற்கான சீனாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பிரியங்கா விக்ரமசிங்கே  தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,  சீனாவின் ஷி யான் 6  ஆராய்ச்சிக் கப்பலை இலங்கையில் நிறுத்திவைப்பதற்கு இங்குள்ள சீன தூதரகம் அரசிடம் அனுமதி கோரியது.

இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக அந்தக் கப்பல் வரும் அக்டோபர் மாதத்தில் இலங்கை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட தேதி எதுவும் தற்போதுவரை உறுதியாகவில்லை. சீனாவின் இந்தக் கோரிக்கையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் யுவான் வாங் 5 என்ற சீன உளவுக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset