நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் தடை

வாஷிங்டன்:

2008இல் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த தடை விதித்து, அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியாகினர்.

தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியான கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா மீது குற்றம்சாட்டப்பட்டது.

அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2013இல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்பு, நன்னடத்தை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த 2020இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு நாடு கடத்த லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் நாடு கடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset