
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சத்தீஸ்கர், ம.பி.,யில் எதிரொலிக்கும் தமிழகத்தின் மகளிர் உரிமை திட்டம்
புது டெல்லி:
தமிழகத்தின் ஆளும் திமுக அரசு செயல்படுத்த உள்ள விளிம்புநிலை குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அளிக்கும் மகளிர் உரிமைத் திட்டம் எதிர் வரும் சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல் வாக்குறுதிகளாக எதிரொலிக்க ஆரம்பிக்கவிட்டன.
தமிழகத்தில் 2021-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மகளிருக்கு ரூ.1000 மாதந்தோறும் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இந்தத் திட்டத்தை சில மாதங்களில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரிவிந்த் கேஜரிவால் அண்மையில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி உதவி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில், பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm