நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்‌ஷினுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு 

பேங்கோக்: 

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் தக்‌ஷினுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை அளித்துள்ளது. 

15 ஆண்டுகளுக்குப் பிறகு தக்‌ஷின் ஷினவத்ரா தாய்லாந்து நாட்டிற்குத் திரும்பிய நிலையில் அவருக்கு எதிராக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

மோசடி நடவடிக்கைகள், அதிகார துஷ்பிரயோகம் காரணத்திற்காக தக்‌ஷினுக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அடுத்தடுத்து குற்றங்களை அனுபவிக்க நேர்ந்ததால் அவருக்கு எட்டு ஆண்டுகளாக குறைக்கப்படது. 

முன்னதாக, 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தக்‌ஷின் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்குத் திரும்பியுள்ளார். 

காலை 9 மணியளவில் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தைத் தக்ஷின் ஹினவத்ரா வந்தடைந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset