நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து பிரதமர் வேட்பாளர் ஸ்ரெத்தா தாவிஷினுக்கு 11 கட்சிகள் ஆதரவு 

பேங்கோக்: 

தாய்லாந்து நாட்டில் அரசியல் நெருக்கடி வலுத்துவரும் நிலையில் தற்போது 11 கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை PHEU THAI கட்சியின் முன்னணி தலைவரான சொல்னான் ஶ்ரீகௌ கூறினார். 

11 கட்சிகள் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதால் அக்கூட்டணியின் ஒரே ஒரு பிரதமர் வேட்பாளரான ஸ்ரெத்தா தாவிஷினுக்கு அனைவரும் ஆதரவு வழங்குகின்றனர்.   

இன்று கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் அவரை பிரதமராக ஆதரிக்க 11 கட்சிகளும் முடிவெடுத்துள்ளதாக அவர் சொன்னார். 

தாய்லாந்து நாட்டில் 11 கட்சிகள் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதால் நாடாளுமன்றத்தில் அதன் எண்ணிக்கை 314ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் 35 அமைச்சர்களும் துணையமைச்சர்களும் இருக்கும் நிலையில் பிரதமர் ஒருவர் அரசாங்கத்தை நிர்வகிப்பார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset