நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லி விமானத்தில் வெடிகுண்டு தகவலால் 8 மணி நேரம் தாமதம்

புது டெல்லி:

தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புணே புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து CRPF படையினர் சோதனை நடத்தினர்.

இதில், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனால் 8 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது.

புணேவுக்கு வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குச் செல்வதற்கு விஸ்தாரா விமானம் யுகே971 தயாராக இருந்தது. அதில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், காலை 7.38 மணிக்கு அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக குருகிராமில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது.

இதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் உடனடியாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர். விமானத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விமானம் திட்டமிட்டபடி, 8.30 மணிக்குச் செல்லவில்லை.

அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது பிற்பகல் 2.15 மணியளவில் தெரியவந்தது. அதன்பின்னர், மாலை 4.30 மணியளவில் சுமார் 8 மணிநேரம் தாமதாக அந்த விமானம் புணே புறப்பட்டுச் சென்றது.  

கட்டாயப் பாதுகாப்பு சோதனை காரணமாக விமானம் காலதாமதமாக பயணித்ததாக விஸ்தாரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset