
செய்திகள் தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்-இல் HD- தரத்தில் புகைப்படங்கள் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்
மென்லோ பார்க் :
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை HD- தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தப் புதிய அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகின்றது.
புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.
புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும்.
இதற்காக செயலியில் சிறியதாக "HD" என்ற ஐகான் வழங்கப்படவுள்ளது. புகைப்படங்களைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் HD- தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த அம்சம் சோதனையிருந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகின்றது.
ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை HD- தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது.
இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.techcrunch.com
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm