நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கிகளின் கேட்பாரற்று கிடக்கும் தொகையை தெரிந்துகொள்ள புதிய இணையதளம்: RBI

புது டெல்லி:

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் டெபாசிட்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள UDGAM என்ற புதிய இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி வைத்தது.

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த தொகை, 10 ஆண்டுக்களுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ளன. இந்தத் தொகை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

பல்வேறு வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் பணத்தை உரியவர்கள் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் "உத்கம்' என்ற இணையளதளத்தை  ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடங்கிவைத்தார். 

https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login என்ற இந்த இணையதள முகவரியில்  பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, தனலெட்சுமி வங்கி, சௌத் இந்தியன் வங்கி, டிபிஎஸ் இந்தியா வங்கி, சிட்டி வங்கி உள்ளிட்ட 7 வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத டெபாசிட்கள் குறித்த தகவல்களை  தெரிந்து கொள்ளலாம்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset