நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தேடி விடுவித்தது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

புது டெல்லி:

குஜராத்தில் 2002-இல் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடு மை செய்து அவரது குழந்தையும், 14 பேர் குடும்பத்தையும் கொன்ற வழக்கின் குற்றவாளிகளுக்கு மட்டும் குஜராத் அரசு தண்டனை குறைக்கப்பட்டு விடுவித்தது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர், அனைத்து கைதிகளுக்கும் திருந்துவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்படுகிறதா? குறிப்பிட்ட கைதிகளுக்கு மட்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படுவது ஏன்?

14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த அனைத்து கைதிகளுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறதா?

நாடு முழுவதும் சிறைகள் நிரம்பி வழிவது ஏன்? தகுதியான அனைத்து கைதிகளுக்கும் அத்தகைய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'' என்றனர்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset