நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடி அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் சிஏஜியின் அதிர்ச்சிகர தகவல்கள்

புது டெல்லி:

ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி ரூபாய், இறந்துபோன 966 நோயாளிகளின் பெயர்களில்  காப்பீட்டு தொகை, அயோத்தியா மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு என பிரதமர் மோடி அரசை குற்றச்சாட்டி சிஏஜி அதிர்ச்சிகர முறைகேடுகளை  வெளிப்படுத்தி உள்ளது.

இந்த அறிக்கை மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் பாரத மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எக்ஸ்பிரஸ் சாலை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் டெல்லி - ஹரியானா குருகிராமை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH-48-ல் நெரிசலை குறைக்கும் வகையில், புதிதாக உயர்மட்ட 8 வழி துவாரகா விரைவுச்சாலை  நெடுஞ்சாலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

ஹரியானாவில் 18.9 கிமீ நீளத்திலும், டெல்லியில் 10.1 கிமீ நீளத்திலும் ஒற்றைத் தூண்களில் விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் தரப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சாலைக்கு ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க 18.20 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்காத நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இறந்துபோன 966 நோயாளிகளின் பெயர்களில் காப்பீட்டு தொகையை பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு ரூ.2.61 கோடி மதிப்பிலான தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 403 பேரின் பெயரில் காப்பீட்டு தொகையை பெற்று மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

9999999999 என்ற செயல்படாத ஒரே தொலைபேசி எண்ணை வைத்து 7.5 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset