நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கிழக்கு லடாக் பிரச்சனைக்கு தீர்வு:  இந்தியா - சீனா முடிவு

புது டெல்லி:

கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், 2020-இல் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். சீன தரப்பிலும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நேரிட்டன.

இதனால் இரு நாடுகளும் எல்லையில் படிப்படியாக படைகளையும் கனரக தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இருதரப்பு ராணுவ ரீதியிலான 19ஆவது சுற்றுப் பேச்சு, கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவின் சூசுல்-மோல்டா பகுதியில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நேர்மறையான, ஆக்கபூர்வமான, ஆழமான விவாதம் நடைபெற்றதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset