நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மதுரா ஈத்கா மசூதியிலும் ஆய்வு மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தில் மனு

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமிக்கு அருகே அமைந்துள்ள- ஷாஹீ ஈத்கா மசூதி ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதை தெரிந்துகொள்ள, அந்த மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி முக்தி நிர்மாண் அறக்கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது.

ஏற்கெனவே வாரணாசியில் ஞானவாபி மசூதியில் இதேபோன்று ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுராவில்கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படும் கிருஷ்ண ஜன்மபூமி கோயிலையொட்டி, ஷாஹீ ஈத்கா மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி முக்தி நிர்மாண் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அந்த வளாகத்தில் ஷாஹீ ஈத்கா மசூதி நிர்வாக குழுவினரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

புனித வழிபாட்டுத் தலமாக ஸ்ரீகிருஷ்ண ஜன்மபூமி முக்தி நிர்மாண் அறக்கட்டளை கருதும் நிலையில், அதனை கழிப்பறைகளாகவும் மசூதி நிர்வாக குழு பயன்படுத்துகிறது.
வளாகத்தில் உள்ள ஹிந்து சின்னங்கள், கோயில் தூண்கள் உள்ளிட்டவற்றை மசூதி நிர்வாக குழுவும், அதன் பிரதிநிதிகளும் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றனர்.

இது அந்த இடத்தின் புனிதத்தன்மை மற்றும் கலாசார பாரம்பரியத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால், ஏற்கெனவே கோயில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை உள்ள நிலையில், அதுகுறித்து தெரிந்துகொள்ள மசூதி வளாகத்தில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset