நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2.5 லட்சம் இந்தியர்கள் பிற நாட்டு குடியுரிமை பெற்று பாஸ்போர்ட்டை திருப்பி அளித்துள்ளனர்

புது டெல்லி:

கடந்த 8 ஆண்டுகளில் 2,46,580 இந்தியர்கள் பாஸ்போர்ட்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதிலில், கடந்த 2014 முதல் 2022ம் வரை 2,46,580 இந்தியர்கள் பிற நாட்டு குடியுரிமை பெற்று இந்திய கடவுச்சீட்டுகளை ஒப்படைத்துள்ளனர்.

இதில் 60,414 பேருடன் தில்லி முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 28,117 பேரும், குஜராத்திலிருந்து 22,300 பேரும், கோவாவில் 18,610 பேரும், கேரளத்தில் 16,247 பேரும் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்துள்ளனர்.

இதுபோல, கடந்த 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை 35 நாடுகளில் வசிக்கும் 24,000 இந்தியர்கள் அவர்களின் கடவுச்சீட்டுகளை ஒப்படைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset