நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

புது டெல்லி:

ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை பிரதமர் மோடி 2.12 மணி நேரம் நீண்ட விளக்கமளித்துப் பேசினார்.

ஆனால், முதல் 1 ஒரு மணி நேரத்துக்கு மேல் மணிப்பூர் விவகாரம் குறித்து மோடி பேசவில்லை. அவரை மணிப்பூர் குறித்து பேச எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டன.

அவர் மணிப்பூர் குறித்து பேசாததால் திர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, வாக்கெடுப்பில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் இல்லாததால், குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

மணிப்பூர் குறித்து பேசிய பிரமதர் மோடி, மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்.
"மணிப்பூர் கலவரம் கவலையளிக்கிறது. இதை அரசியலாக்கக் கூடாது.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. குற்றவாளிகள் தண்டனை பெறுவதை உறுதி செய்யவும், அமைதியை நிலைநாட்டவும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

அங்குள்ள உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்துதான் பல்வேறு வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset