நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கிவிட்டு மத்திய அமைச்சரை நியமித்து மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்

புது டெல்லி:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான 3 பேர் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை நியமிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் வரை, அவர்களைத் தேர்வு செய்வதற்கான பிரதமர் தலைமையிலான குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "தேர்தல் ஆணையத்தை பிரதமரின் கைப்பாவையாக செயல்பட வைப்பதற்கான வெளிப்படையான முயற்சி இது. அரசியல் சாசனத்துக்கு எதிரான, நியாயமற்ற மசோதா. அனைத்து அமைப்புகளிலும் இதை எதிர்ப்போம்' என்றார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், "தங்களுக்கு விருப்பமில்லாத உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படுவதே மத்திய அரசின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை பாதிக்கும்' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset