நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் பதிவுகளை வழங்க தாமதம்: டுவிட்டர் நிறுவனத்துக்கு அபராதம்

வாஷிங்டன் : 

டிவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட சமூக வலைத்தளம் தற்போது எக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. 

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு குற்ற வழக்கில் முன்னாள் அதிபர் டிரம்ப் பற்றிய டிவிட்டர் பதிவுகளை வழங்க அந்த நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. 

தேடுதல் ஆணை பிறப்பித்து இருந்தது. ஆனால் டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றம் கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்து வந்தது. 

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தகவல்களைத் தர தாமதம் செய்ததாகக் கூறி டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ.3.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமாக விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. 

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset