நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை: எம் எச் ஜவாஹிருல்லா

சென்னை:

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த ஜூலை 9 அன்று கோவை மத்தியச் சிறை முற்றுகைப் போராட்டம் நடத்தியது. தமிழ்நாடு அமைச்சரவை கூடி நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு வழிவகுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தின் இறுதியில் ஒரு மாதத்திற்குள் 36 நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையெனில் தலைமைச் செயலகம் நோக்கி அடுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
ஒரு மாதம் கடந்த பிறகும் தமிழ்நாடு அரசு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்தச் சூழலில் நீதியரசர் ஆதிநாதன் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நிர்வாகக் குழுக் கேட்டுக் கொண்டது. 

தமுமுகவின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையெனில் வரும் செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென இன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்று பேராசிரியர் முனைவர்  எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருக்கிறார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset