நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியானாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் வர்த்தகம் செய்யத் தடை விதித்து பிரச்சாரம்

புது டெல்லி:

ஹரியானாவின் நூ மாவட்டத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தை தொடர்ந்து, அங்குள்ள 3 மாவட்டங்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்குத் தடை விதித்து ஊராட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஜூலை 31ம் தேதி ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின்போது ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பள்ளிவாசல் சூறையாடப்பட்டு, இமாம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக முஸ்லிம்களின் கட்டுமானங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வந்தது.

இதற்கு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

வன்முறை தொடர்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள மஹேந்தர்கர், ரேவாரி, ஜஜ்ஜர் மாவட்டங்களில் முஸ்லிம்கள் வியாபாரம் மேற்கொள்ளத் தடை விதித்து சில ஊராட்சித் தலைவர்கள் கடிதம் எழுதி பரப்புரை செய்து வருகிறார்கள்.

அந்தக் கடிதங்களில், நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் குறிப்பிட்டு, முஸ்லிம்கள் வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று ஊராட்சிகளின் பேனர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset