நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடி மெளன விரதம் ஏன்?: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகள்

புது டெல்லி: 

பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி ஏன் மெளனம் விரதம் மேற்கொண்டு வருகிறார் என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தன.

நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்  பேசுகையில்,

2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சம்பவ இடத்துக்கு சென்றார்.

மணிப்பூர் கலவரம் குறித்து 80 நாள்களுக்குப் பிறகு பிரதமர் மோடி வெறும் 30 நொடிகள் பேசினார்.  ஒரே இந்தியா எனக் கூறிவிட்டு மணிப்பூரை இரண்டாகப் பிரித்துவிட்டார்கள்.

தில்லியில் தொடர் போராடத்தில் 750 விவசாயிகள் உயிரிழந்தபோதும், பாலியல் வன்கொடுமை புகாரை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் சாலையில் போராடியபோதும், 2020இல் தில்லியில் நடைபெற்ற கலவரத்தின்போதும், குறிப்பிட்ட பெரு நிறுவன முதலாளி ஆதாயம் அடைவதாக குற்றஞ்சாட்டியபோதும், சீன ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பியபோதும், புல்வாமா தாக்குதலுக்கு முன்பு ராணுவ வீரர்களின் வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரியதாக ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் கூறியபோதும், தற்போது மணிப்பூர் கலவரத்தின்போதும் பிரதமர்  மோடி மௌனம் விரதம் மேற்கொண்டு வருகிறார்.

மணிப்பூரில் இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில முதல்வரும், உள்துறையும் தோல்வியடைந்துள்ளதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வராததும், தனது கட்சி ஆளும் மாநில அரசின் தோல்வியை ஒப்புக் கொள்ளாததுமே பிரதமர் மோடியின் மௌனத்துக்கான காரணம் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset