நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுலுக்கு மீண்டும் அரசு வீடு 

புது டெல்லி:

காங்கிரஸ் எம்பி பதவி ராகுல் காந்திக்கு  திரும்ப கிடைத்துள்ள நிலையில், தில்லியில் அவர் ஏற்கெனவே தங்கியிருந்த அரசு வீடு மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. 

இதையடுத்து ராகுல் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை மக்களவைச் செயலகம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

ராகுலுக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைக்கப் பெற்ற நிலையில், தில்லி துக்ளக் லேன் பகுதியில் அவர் ஏற்கெனவே தங்கியிருந்த அரசு பங்களா மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் விரைவில் அவர் குடியேற உள்ளார்.

20 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்த ராகுல், கடந்த ஏப்ரலில் அதனை காலி செய்து தனது தாயார் சோனியா காந்தியுடன் வசித்து வந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset