நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு: உச்சநீதிமன்றத்தில் மனு

புது டெல்லி:

முஸ்லிம்களைக் கொல்லவும், அவர்களை சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கவும் அழைப்பு விடுத்து பேசப்பட்ட வெறுப்புணர்வு பேச்சுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஷாஹீன் அப்துல்லா என்ற பத்திரிகையாளர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரணிகளில் முஸ்லிம்களைக் கொல்ல வேண்டும், அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புறக்கணித்து ஒதுக்கவேண்டும் என்று வெறுப்புணர்வுடன் பேசப்பட்டுள்ளது.

எந்தவொரு சமூகத்தினருக்கு எதிராகவும் வெறுப்புணர்வு பேச்சுகள் பேசப்படாததை மாநில அரசுகள் மற்றும் காவல் துறை உறுதி செய்வது குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பேரணிகளில் பேசப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹரியாணா மாநிலம் ஹிசார் பகுதியில் சம்ஹஸ்த் ஹிந்து சமாஜ் அமைப்பின் பேரணி நடைபெற்றது.

அப்போது அந்தப் பகுதியில் 2 நாள்களுக்குப் பிறகு முஸ்லிம்களை வேலைக்கு வைத்துள்ளவர்களின் கடைகள் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படும் என்று பேரணியில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். காவல் துறையினர் முன்னிலையில், இவ்வாறு அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பகுதியில் காவல் துறையினர் இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடவும், அவர்களை ஒதுக்கிவைக்கவும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் ஒருவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

இதுபோன்ற பேச்சுகள் கொண்ட பேரணிகள் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நாடு முழுவதும் வெவ்வேறு மதத்தினர் இடையே விரோதம், அளவிட முடியாத வன்முறைக்கு வழிவகுக்கும்.

எனவே இதுபோன்ற பேரணிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று  ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் காவல் துறை, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset