நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

திருவனந்தபுரம்:

பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒரே சட்ட வழிமுறைகளை ஏற்படுத்த பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக அரசு முற்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து இந்திய சட்ட ஆணையம் கருத்துகளைப் பெற்றது.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில்,

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையைப் பறிக்கும். அந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அவசரமான ஒருதலைப்பட்ச முடிவை மேற்கொண்டுள்ளது. எனவே இதுகுறித்து மாநில அரசு கவலையடைந்துள்ளது.

பொது சிவில் சட்டத்தை வழிகாட்டு கொள்கையாக வைத்திருக்கலாம் என்று அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறதே தவிர, அந்தச் சட்டம் கட்டாயமல்ல.

பொது சிவில் சட்ட திணிப்பு என்பது ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமை மீது தாக்குதல் நடத்தும் மதச்சார்புள்ள நடவடிக்கை என்று கேரள சட்டபேரவை நம்புகிறது.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset