நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூர் கலவரம்: 3 பெண் நீதிபதிகள் நியமித்தது உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை சீரமைக்கப்படும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட 3 முன்னாள் உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நியமித்தது.

இந்தக் குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாக தாக்கல் செய்யுவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்து கூறியதாவது:

பெண் நீதிபதிகள் குழுவுக்கு ஜம்மு- காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கீதா மித்தல் தலைமை வகிப்பார்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஷாலின் பி úôஷி, தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.

இக் குழுவினர் நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்வர்.
 கலவரம் தொடர்பாக 11 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள வழக்குகளை மாநில அரசு  42 சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்தக் குழுவில் குறைந்தது ஒரு வெளிமாநில ஆய்வாளர் இடம்பெற வேண்டும்  என்றனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கடந்த 3 மாதங்களாக அங்கு இரு சமூகத்தினருக்கு இடையே நடைபெறும் கலவரத்தில் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset