நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஹரியாணா மதக் கலவரம்: இடிக்கப்படும் அப்பாவிகளின் வீடுகள், தர்காவுக்கு தீவைப்பு

குருகிராம்:

ஹரியாணாவில் மதக் கலவரம் நடைபெற்ற நூ மாவட்டத்தில் அப்பாவிகளின் வீடுகள் சட்ட விரோத கட்டடம் என மாநில நிர்வாகம் புல்டோசர் கொண்டு கடந்த ஒரு வாரமாக இடித்து தள்ளி வருகிறது.

இந்த  நடவடிக்கைக்கு பஞ்சாப்- ஹரியாணா உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது.
இதனிடையே, அந்த மாவட்டத்துக்கு அருகே உள்ள குருகிராமில் உள்ள தர்காவுக்கு கலவரக்காரர்கள் தீயிட்டனர்.

நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பிரிஷத் அமைப்பினர் ஜூலை 31ம் தேதி நடத்திய பேரணியில் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை மதக்கலவரமாகி, அருகே உள்ள குருகிராமுக்கும் பரவியது.

இந்தக் கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல் படை வீரர்கள், மசூதியின் இமாம் உள்பட 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

haryana nuh riots: Haryana: 150 shanties, 5 houses bulldozed in Nuh within  24 hours over riot links - The Economic Times

Haryana burning: Demolition drive in violence-hit Nuh continues

கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி முஸ்லிம்களின் வீடுகள், கடைகளின் கட்டுமானங்களை  நூ மாவட்டத்தில் ஹரியாணா அரசு அதிகாரிகள் புல்டோசர் வைத்து கடந்த சில நாள்களாக இடித்து தள்ளி வந்தனர்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.எஸ்.சந்தாவாலியா, கட்டடங்களை இடிக்கும் பணிகளில் மேலும் ஈடுபடக் கூடாது ஹரியாணா அரசுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

குருகிராமின் காந்தசா கிராமத்தில் முஸ்லிம், ஹிந்துக்கள் என இருதரப்பினரும் வழிபாடு நடத்தி வந்த தர்காவில் உள்ள அடக்க ஸ்தலம் திங்கள்கிழமை மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset