நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
இதனையடுத்து அவரால் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. 

சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்த போது, வெளிநாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுகளை, அரசு கருவூலத்தில் சேர்க்காமல், அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

பரிசு பொருட்கள் குறித்த விவரத்தை மறைத்ததாக குற்றம்சாட்டிய தேர்தல் ஆணையம், இது தொடர்பாக, இம்ரான் கான் மீது பாக்., தேர்தல் ஆணையம் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற நீதிபதி ஹிமாயுன் திலாவர் பிறப்பித்த உத்தரவு: 

பரிசு பொருட்கள் குறித்த விவரத்தை பொய்யான தகவலை வேண்டும் என்றே, தேர்தல் ஆணையத்தில் இம்ரான் கான் தாக்கல் செய்துள்ளார். 

இதன் மூலம் அவர் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டது ஊர்ஜிதமாகிறது எனக்கூறி 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு மூலம், இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இம்ரான் கானை போலீசார் கைது செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset