நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியா - பாகிஸ்தான் பேச்சு நடத்த அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்:

இந்தியா-பாகிஸ்தான் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருவதால் இரு நாடுகளுக்கான உறவில் பாதிப்பு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் காஷ்மீர் பிரச்னையும் அவற்றில் அடங்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள அந்த நாடுகள் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றார்.

அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் நோக்கில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ள நிலையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

2019இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியதில் இருந்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் சீராக இல்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset