நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

டிவிட்டர் வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் 

மென்லோ பார்க் :

டிவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டம் உலகளவில் டிவிட்டரில் புளூ சந்தா வைத்திருப்போருக்கு வழங்கப்படுகின்றது.

கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்குக் குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 பின் தொடர்பவர்களைக் கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகும்.

அனைத்து X புளூ மற்றும் வெரிஃபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. 

வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இத்திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களைக் கடந்த பிறகு அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகின்றது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எநந்த் தகவலும் வழங்கப்படவில்லை. 

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ஆம் தேதியிட்ட வாரத்திலிருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிஃபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்றுப் பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளைச் செட்டப் செய்து கொள்ள வேண்டும்.

புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தைப் பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியமாகும். பயனர்கள் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க, இந்தத் திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset