நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இன்றைய நாளின் சிறப்பு - முஹர்ரம் 9, 10 - ஹிஜ்ரி சிந்தனை

ஆதம்(அலை) அவர்களின் நாற்பது ஆண்டுகாலப் பாவ மன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்பட்ட நாள்,

நூஹ்(அலை) அவர்களின் கப்பல் கரைசேர்ந்து மனித குலம் மீண்டும் வாழத் தொடங்கிய நாள்,

இப்ராஹீம் (அலை) அவர்கள் நெருப்புக் குண்டத்திலிருந்து காப்பாற்றப்பட்ட நாள்,

ஷுஐப் (அலை) அவர்கள் நோயிலிருந்து முழுமையாக நலம் பெற்ற நாள்,

யூனூஸ் நபி (அலை)  அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள்,

மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னின் படையிலிருந்து காப்பாற்றப்பட்ட நாள்,

சுலைமான் (அலை) அவர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தவறு என உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கோரிய நாள்,

ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படாமல் வானத்திற்கு  உயர்த்தப்பட்ட நாள்,

இத்தனை சிறப்புகளும் உடைய நாள்தான் முஹர்ரம் பத்தாம் நாள்.

முஹர்ரம் 9, 10 அல்லது 10,11 ஆகிய இருநாள்கள் நோன்பு நோற்பது ஓராண்டில் செய்யப்படும் சிறிய பாவங்களுக்குப் பரிகாரம் ஆகும்.

- சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset