
செய்திகள் சிந்தனைகள்
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
சத்தியப் பாதையின் தனிச் சிறப்பென்னவெனில் பாதை நெடுக - தொடக்கத்திலிருந்து இறுதி வரை - சோதனையும் துன்பமும் துயரமும் குவிக்கப்பட்டிருப்பதுதான்.
கணிதம் படிக்கின்ற புத்திசாலி மாணவன் ஒருவனுக்குக் கடினமான கேள்வி அல்லது புதிர் கொடுக்கப்படும் போது அதனைப் பார்த்த மாத்திரத்தில் ‘என்னுடைய அறிவாற்றலுக்கு விடுக்கப்பட்ட இன்னுமொரு சவால்’ என அவன் பெரிதும் மகிழ்வான். ‘என்னுடைய புத்திக்கூர்மையை நிலைநாட்டுவதற்காகக் கிடைத்த இன்னுமொரு வாய்ப்பு’ என்று துள்ளிக் குதிப்பான்.
அதே போன்று வாய்மையும் தூய்மையான எண்ணமும் கொண்ட ஓர் இறைநம்பிக்கையாளரும் சோதனையும் எதிர்ப்பும் சூழும் போது பெரிதும் மகிழ்வார்.
தன்னுடைய இறைநம்பிக்கையை மெய்ப்பிப்பதற்காகக் கிடைத்த நற்பேறாக அந்தச் சோதனையையும் எதிர்ப்பையும் அவர் பார்ப்பார். சந்தோஷப்படுவார்.
எரிந்து கொண்டிருக்கின்ற மெழுகுவர்த்தியை ஊதி விடுங்கள். அது உடனடியாக அணைந்து விடும். ஏனெனில் லேசா லேசா காற்றடித்தாலே இங்குமங்கும் அலைபாய்கின்ற மெழுகுவர்த்திக்கு ஊதலைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி கிடையாது. இதில் சந்தேகமே இல்லை.
ஆனால் கனன்று கொண்டிருக்கின்ற அடுப்பை ஊதிவிடுகின்ற போது அது இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டெரியும்.
நீங்களும் அந்த அடுப்பைப் போன்று ஆகி விட வேண்டும். நமத்துப் போன விறகு கட்டைகளால் அணைந்து போவதற்குப் பதிலாக அவற்றையும் தீனியாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து சக்தியை ஈட்டிக்கொள்கின்ற அடுப்பாய் உங்கள் செயல்திறனை நீங்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எதிர்ப்புகளைக் கண்டு அடங்கிப் போவதற்குப் பதிலாக அவற்றிலிருந்து ஊக்கத்தையும் சக்தியையும் ஈட்டிக்கொள்கின்ற அடுப்பு வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளாத வரை நம்மால் இறைவனின் மார்க்கத்திற்காக நல்ல முறையில் சேவையாற்ற முடியுமா என்பது சந்தேகமே.
-மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am