
செய்திகள் சிந்தனைகள்
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
முஆத் இப்னு ஜபல் (ரலி) தம் சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கி தொழவைக்கும்போது நீண்ட அத்தியாயத்தை ஓதினார். அப்போது அவருக்குப் பின்னால் தொழுதுகொண்டிருந்த ஒருவர், தொழுகையிலிருந்து விலகி தனியாகத் தொழுதார்.
முஆத் (ரலி) அவரை நயவஞ்சகர் என்றார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர், நபிகளாரிடம் சென்று கண்ணீர் மல்க முறையிட்டார்.
முஆத் (ரலி) அவர்களிடம் விசாரித்த நபிகளார், "நீரென்ன குழப்பவாதியா?'' என்று மூன்று முறை கேட்டார்கள். தொழுகையில் நடுத்தரமான அத்தியாயங்களை ஓதுமாறு பணித்தார்கள்.
பின்னர் நடைபெற்ற ஒரு போரில், "நான் யார் என்பதை இப்போது முஆத் தெரிந்துகொள்வார்'' என்று கூறியவாறே நபி (ஸல்) அவர்களுடன் அவரும் அந்தப் போரில் கலந்துகொண்டு வீராவேசமாகப் போரிட்டார். ஷஹீதானார்.
போர் முடிந்தபின் முஆத் (ரலி) அவர்களிடம் நபிகளார், "உம்மைக் குறித்து என்னிடம் புகார் தெரிவித்த அந்த சகோதரர் எங்கே?'' என்று கேட்டார்கள்.
முஆத் (ரலி): "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவர் உண்மையாளராக இருந்தார். நான்தான் அவரைத் தவறாகக் கருதிவிட்டேன். அவர் ஷஹீதாகிவிட்டார்''. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)
முஆத் (ரலி) அவர்களால் நயவஞ்சகர் என்று கூறப்பட்ட அந்த நபித்தோழர், நபி (ஸல்) அவர்களுடைய தலைமையில் போரிட்டு, ஷஹீத் எனும் உயர் அந்தஸ்தை பெற்றார்.
ஒருவரை எடைபோடும் விஷயத்தில் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.
ஒருவர் எந்த எண்ணத்தில் செயல்படுகிறார் என்பதையும் அவர் நேர்வழியில் இருக்கிறாரா? வழிகேட்டில் இருக்கிறாரா? என்பதையும் அல்லாஹ் மட்டுமே அறிவான். இது நம் அனைவருக்கும் தெரியும்.
"வழி தவறியவர் யார், நேர்வழியில் இருப்பவர் யார் என்பதை நிச்சயமாக உமது இறைவனே நன்கு அறிபவனாக இருக்கிறான்” (6:117)
ஆயினும் மனிதர்களை சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் பிரித்து அனுப்பும் வேலையை இன்னும் பலர் இங்கே மும்முரமாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நாங்கள் மட்டுமே நேர்வழியில் இருக்கிறோம். மீதி எல்லோரும் தவறான வழியில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய அபத்த சிந்தனை.
மனிதர்களை எவ்வாறேனும் நேர்வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் நபி (ஸல்) கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்கள்.
ஆனால் இங்கே சிலர், அவர்களை வழிகேடர்களாக முத்திரை குத்துவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகிறார்கள். காலக் கொடுமை!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am
சிலர் கரத்தால் உதவுகிறார்கள்; இன்னும் சிலர் கருத்தால் உதவுகிறார்கள் - வெள்ளிச் சிந்தனை.
February 7, 2025, 7:57 am
உச்சம் தொட்டவர்கள் வீழ்ச்சி காண்பர் - வெள்ளிச் சிந்தனை
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am