செய்திகள் தொழில்நுட்பம்
டிவிட்டரில் வேகமெடுக்கும் ரிபிரான்டிங்
மென்லோ பார்க் :
உலகின் முன்னணி சமூக வலைதளமாக டிவிட்டர் விளங்கி வருகின்றது. எலான் மஸ்க் டிவிட்டரில் ஏராளமான மாற்றங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். அவ்வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டிவிட்டர் லோகோ மாற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, டிவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டிவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.
மற்ற டிவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டிவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டிவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளைச் சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர்த்து, டிவிட்டர்சப்போர்ட், டிவிட்டர்டெவ், டிவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டிவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 8:47 am
நொடிக்கு 6.9 அடி வேகத்தில் அசுர நடை மெஸ்சியை மிஞ்சிய எந்திரன்
November 19, 2024, 11:12 am
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்
November 17, 2024, 5:25 pm
ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய வரலாற்றில் முதல்முறை
November 10, 2024, 2:57 pm
WhatsAppஇல் புதிய அம்சம்: இனி சந்திப்புகளை எளிதில் திட்டமிடலாம்
November 6, 2024, 3:12 pm
ஹோண்டா மலேசியா தனது 36,000 யூனிட் கார்களில் இபிஎஸ் கியர்பாக்ஸ் சர்விஸ் செய்ய அழைப்பு விடுத்துள்ளது
November 1, 2024, 10:38 am
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
October 29, 2024, 12:54 pm
ஆப்பிள் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm