நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

புகழ்பெற்ற ஓவியர் மாருதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 

"தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர்" என்று ஓவியர் மாருதியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதியின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்.

தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். மறைந்த முதல்வர் கருணாநிதியின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல ஓவியர் மாருதி இன்று (ஜூலை 27) காலமானார். அவருக்கு வயது 86. புனேவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் உயிர் பிரிந்தது.

Pin on photos, art

 

Painting Artwork Tamil Nadu Beautiful Woman By Maruthi 3

விகடன், குமுதம், குங்குமம், கண்மணி போன்ற இதழ்களுக்கு அட்டைப்படமும், கதை - கவிதைகளுக்கு ஏற்ற ஓவியங்களும் வரைந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது.

ஓவியம் மட்டுமின்றி 'உளியின் ஓசை', 'பெண் சிங்கம்' ஆகிய திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணி செய்திருக்கிறார்.

Pin by Raj Go on maruthi master | Indian art gallery, Painting art  projects, Female art painting

Pin on art2

இவரின் கைவண்ணத்தில் உருவான ‘எண்ணிலடங்கா ஓவிய தேவதைகளுக்கு கணக்கில்லாத ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது இவரது தனித்துவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset