நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

சென்னை: 

அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரபிக் கடலில் கர்நாடக கடலோரப் பகுதியையொட்டி வரும் 21-ம் தேதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதன் தாக்கத்தால், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, வரும் 27-ம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22, 23-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், வரும் 19-ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20, 23-ஆம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். 

எனவே, இப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset