
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்திலிருந்து 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்: அமைச்சர் நாசர்
சென்னை:
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர்.
அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக மாநில ஹஜ் குழு தலைவருமான ப.அப்துல் சமது, செயல் அலுவலர் மு.அ.சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அசன் மவுலானா, பிறப்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சா.விஜயராஜ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தின் முதல்கட்ட பயணம் தொடங்கியுள்ளது. வரும் 30-ஆம் தேதி வரை தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணத்துக்கு பயணிகள் செல்கின்றனர்.
14 விமானங்கள் மூலம் 5,730 பேர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். முதல் நாளான நேற்று மட்டும் 843 பேர் சென்றனர். பயணம் செய்பவர்களுக்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயணம் மேற்கொள்பவர்களுக்கு உரிய உணவு, தங்குமிடம் என தமிழக அரசு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது. பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது.
இதற்காக இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்காக ரூ.14.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm