செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை:
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழக ஆளுநர் வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் குடியரசுத் தலைவரின் கடிதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களின் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பாஜகவின் கட்டளைப்படி தமிழக ஆளுநர் செயல்பட்டார் என்பதை இந்த முயற்சி தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது.
இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக இக் கடிதம் சவால் செய்கிறது.
இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநிலங்களையும் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் போரில் நாம் நமது முழு பலத்துடன் போராடுவோம். தமிழ்நாடு போராடும்-தமிழ்நாடு வெற்றி பெறும்!’ எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 2:28 pm
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
March 4, 2026, 1:13 pm
கொடைக்கானலில் இஸ்ரேலியர்களுக்கு 'துப்பாக்கி ஏந்திய' போலீஸ் பாதுகாப்பு
March 4, 2026, 1:03 am
இஸ்ரேல் - ஈரான் போரினால் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்ய வேண்டிய 1 கோடி முட்டைகள் தேக்கம்
March 2, 2026, 6:30 am
அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
February 27, 2026, 12:52 pm
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தி மு க வில் இணைந்தார்
February 26, 2026, 3:40 pm
முன் அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்க வேண்டாம்: தவெகவினருக்கு கட்டுப்பாடு
February 26, 2026, 2:32 pm
திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம்: கே.என்.நேரு
February 25, 2026, 5:05 pm
