
செய்திகள் தொழில்நுட்பம்
டிவிட்டர் பெயர், லோகோ மாற்றத்திற்கு காரணம் இது தான் - எலான் மஸ்க் விளக்கம்
மென்லோ பார்க் :
டிவிட்டர் லோகோவை நீலப் பறவையிலிருந்து X ஆக மாற்றுவதற்கான காரணம் குறித்து எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி டிவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது எனப் பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார்.
இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
நிறுவனத்தின் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டிவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
புதிய X சேவையில் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்கள் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்துள்ளார்.
மேலும், எலான் மஸ்க் டிவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.
டிவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாகக் குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டிவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்ஸ்தாகிரெம் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது.
இந்நிலையில், டிவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டிவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது அதிகரித்து வருகின்றது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டிவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கியிருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாகலிருந்து வருகிறது.
எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am