நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் மாயமான பின்னணியில் காதல் விவகாரம்

பீஜிங்: 

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் மாயமான பின்னணியில் அவரது காதல் விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை. கின் கேங் இருப்பிடம் தொடர்பான எந்த தகவல்களையும் இதுவரை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து ‘எங்கே கின் கேங்?’ என்று சர்வதேச ஊடகங்களும், சீன மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

இந்த நிலையில், கின் கேங் மாயமானதற்கு காரணமாக இருப்பவர் பத்திரிகையாளர் ஃபூ சிஸாடியான் தான் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

யார் இந்த ஃபூ சிஸாடியான்?

ஹாங்காங்கை தலைமையமாகக் கொண்டு செயல்படும் பினீல்ஸ் செய்தி சேனலில் பிரபல பத்திரிகையாளராக இருந்து வந்தவர் ஃபூ சிஸாடியான். இவருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்கும் காதல் இருந்ததாகவும், அதன் பின்னணியில்தான் கேங் மாயமாகியிருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற ஃபு சியாவோடியனுடன் கின் கேங் கொண்டிருந்த காதல் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கு குழு அமைத்து விசாரணை நடத்தி, அது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பிறகுதான் கின் கேங் பொதுவெளியில் வராமல் இருப்பதாக சீன பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்ற மூத்த அதிகாரிகளை விட கின் கேங்குக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். வெளியுறவு அமைச்சர் பதவியை கின் கேங்குக்கு வழங்கினார். இந்த நிலையில், கின் கேங் இம் முடிவு ஜி ஜின்பிங்குக்கு அரசியல் ரீதியாக சரிவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset