நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திருக் குர்ஆன் எரிப்புக்கு ஸ்வீடனுக்கு இராக் பதிலடி: ஸ்வீடன் தூதரை நாட்டைவிட்டு வெளியேற்றியது

ஸ்டார்ஹோம்:

ஸ்வீடனில் திருக் குர்ஆனை எரித்து அவமதிக்கப்பட்டதற்கு பதிலடியாக ஸ்வீடன் தூதரை நாட்டை விட்டு வெளியேற இராக் உத்தரவிட்டது.

ஸ்வீடனுக்கான தங்கள் நாட்டுத் தூதரையும் இராக் திரும்ப அழைத்துள்ளது.

அரசின் அனுமதியுடன் ஸ்வீடனில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் புனித திருக் குரான் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் ஸ்வீடனுக்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் இராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடங்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

அரசின் அனுமதியுடன் இராக் தூதரகம் எதிரே நடைபெறவிருக்கும் அந்த ஆர்ப்பாட்டத்தின்போது திருக் குர்ஆனைக் கொளுத்தப் போவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இராக் தலைநகர் பாக்தாதிலுள்ள ஸ்வீடன் தூதரகத்துக்கு வெளியே அதிகாலையில் குவிந்த நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தூதரகத்தை அடித்து நொறுக்கியதுடன் தீவைத்தும் கொளுத்தினர்.

ஸ்வீடனிலுள்ள இராக் தூதரகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோமிகா, திருக் குரானை அவமதித்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இதனைத் தடுக்கவில்லை.

இதற்கு பதிலடியாக ஸ்வீடன் தூதரை வெளியேற்றியும், அந்நாட்டில் உள்ள தூதரை பின்வாங்கியும் இராக் நடவடிக்கை எடுத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset