நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம்

மென்லோ பார்க் :

டிவிட்டர் தளத்துக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் உருவாக்கிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதல் அதிகளவு பதிவிறக்கங்களைக் கடந்து வருகின்றது. இன்ஸ்டாகிராமைத் தழுவி திரெட்ஸ் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரெட்ஸ் செயலியில் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. அதனால், விரைவில் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் தலைமை செயலதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் நேரடியாகத் தகவல்களை அனுப்பும் சேவையை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.

அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset