நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: விஞ்ஞானிகளுக்கு அதிபர், பிரதமர் பாராட்டு

சென்னை:

நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

விஞ்ஞானிகளுக்கு இந்திய அதிபர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் வாழும் பூமிப்பந்தை தவிர வேறொரு கோளில் உயிர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்ற தேடல்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன.

சிறப்பு திட்டங்கள் அதிலும் பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) மீதான விஞ்ஞானிகளின் கண்ணோட்டம் முக்கியமானது. 

நிலவை பாடாத கவிஞன் இல்லை என்பது போல, அதை ஆய்வு செய்யாத விண்வெளி ஆய்வுத்துறைகளும் இல்லை. 

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், இந்தியாவின் விண்வெளி பயணத்தில் சந்திரயான்-3 புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.

ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும், லட்சியங்களையும் உயரத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். 
அவர்களின் உத்வேகத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் தலை வணங்குகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்காக இஸ்ரோவை காங்கிரஸ் கட்சி பாராட்டி உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset