நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் S.ஈஸ்வரன் கைது - பிணையில் விடுவிப்பு 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் S.ஈஸ்வரன் கைதுசெய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது. 

பிணையில் விடுவிக்கும் நிபந்தனைகளில் ஒரு பகுதியாகத் ஈஸ்வரனின் கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டதாகப் புலனாய்வுப் பிரிவு சொன்னது.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தான் கண்டுபிடித்த விவகாரத்தின் தொடர்பில் ஈஸ்வரன் விசாரணையில் உதவுவதாக முன்னர் கூறியிருந்தது.

அது மேல் விவரங்களை வெளியிடவில்லை.

தற்போது CNA கேட்டிருந்த கேள்விகளுக்கு அது பதிலளித்துள்ளது. 

ஈஸ்வரன் தொடர்புடைய விசாரணையில் Hotel Properties Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங்கிற்குக் (Ong Beng Seng) கைதாணை பிறப்பிக்கப்பட்டதாக இன்று தகவல் வெளியானது.

அவரும் கைதுசெய்யப்பட்டதாகப் புலனாய்வுப் பிரிவு சொன்னது.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்  ஓங் 100,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் சிங்கப்பூர் திரும்பியவுடன், அவரது கடப்பிதழ் பறிமுதல் செய்யப்படும் என்று பிரிவு சொன்னது.

ஈஸ்வரன் விடுவிக்கப்பட்டதற்கான பிணைத்தொகை பற்றிய விவரங்களை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு வெளியிடவில்லை. 

விசாரணை தொடர்வதாக அது தெரிவித்தது.

கடந்த செவ்வாய் கிழமையே ஈஸ்வரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்போதுதான் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஃபிதா
ஆதாரம்: CNA 

தொடர்புடைய செய்திகள்

+ - reset