நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிக முறை வாக்களித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் சாதனை

வாஷிங்டன்:

அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு அதிக முறை வாக்களித்த துணை அதிபர் என்ற சாதனையை கமலா ஹாரிஸ் சமன் செய்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபரே, அந்நாட்டு செனட் சபையின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

செனட் சபையில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களுக்கு உறுப்பினர்கள் சம எண்ணிக்கையில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கும்பட்சத்தில், அப்போது மட்டுமே துணை அதிபர் வாக்களிப்பார். மற்ற சமயங்களில் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

இந்நிலையில், செனட் சபையில் அதிக முறை வாக்களித்த துணை அதிபர் என்ற வரலாற்றுச் சிறப்பை கமலா ஹாரிஸ் புதன்கிழமை சமன் செய்தார்.

துணை அதிபராக செனட் சபையில் கமலா ஹாரிஸ் வாக்களித்தது இது 31ஆவது முறையாகும்.

இதற்கு முன் 1825 முதல் 1832 வரை துணை அதிபராக இருந்த ஜான் சி.கல்ஹான் 31 முறை செனட் சபையில் வாக்களித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்தச் சாதனையை கமலா ஹாரிஸ் தற்போது சமன் செய்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset