நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

 எக்ஸ்ஏஐ (xAI) எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடங்கினார் எலான் மாஸ்க்

மென்லோ பார்க் :

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'ஓபன் ஏஐ' எனும் மென்பொருள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, உலகெங்கிலும் மிகுந்த வரவேற்பையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. 

இதற்கு போட்டியாக இது போன்றதொரு மென்பொருளை உருவாக்க உலகின் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன. கூகுள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி 'டீப்மைண்ட்'ஐ உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவரான, எலான் மஸ்க், நேற்று எக்ஸ்ஏஐ (xAI) எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடங்கினார்.

'ஏஐ' குறித்துப் பலமுறை எச்சரித்துள்ள மஸ்க், அதனை "மிகப்பெரிய அச்சுறுத்தல்" என்று குறிப்பிட்டிருந்தார். அதை உருவாக்குவதில் அவசரம் காட்டுவது சிக்கலை ஏற்படுத்தவள்ளது என்றும் கூறியிருந்தார்.

தற்போது 'எக்ஸ்ஏஐ' நிறுவனத்தைக் குறித்து மஸ்க், "சாட்ஜிபிடி அரசியல் ரீதியாக சார்புநிலை கொண்ட பொறுப்பற்றது. ஆனால் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் குறிக்கோள் பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்வதுடன் வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதுமாகும் எனக் கூறியிருக்கின்றார்.

இந்நிறுவனத்தில் ஓப்பன்ஏஐ, கூகுள் டீப்மைண்ட், டெஸ்லா, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset