நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் நெருக்கடி நிலை: ஜோ பைடன் அறிவித்தார் 

மாண்ட்பெலியர்:

அமெரிக்காவின் வெர்மண்ட் மாநிலத்தில் பெய்யும் கனத்த மழை, வெள்ளம் காரணமாக அதிபர் ஜோ பைடன்  அங்கு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.

வெள்ளத்திலிருந்து குடியிருப்பாளர்களைக் காப்பாற்றுவதற்குப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. மீட்புக் குழுவினர் போர்க்கால அடிப்படையில் இரவு பகல் பாராமல் மக்களை கரையேற்றி வருகின்றார்கள்.

மொண்ட்பெலியர்  நகரில் உள்ள அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. 

More than 100 rescued from floodwaters in Vermont | The Hill

அதன் நீர் ஆற்றில் பாய்ந்து வருவதால் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

வெர்மண்ட்டில் 100க்கும் அதிகமான பொதுமக்கள்  கார்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மீட்கப்பட்டனர்.

வானூர்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களை மீட்க அதிகாரிகள் முயற்சி செய்வதாக The New York Times ஊடகம் தெரிவித்தது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset