
செய்திகள் தொழில்நுட்பம்
செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் ஐபோன் 15 சீரிஸ்
கலிப்போர்னியா :
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் விவேகக் கைப்பேசிகள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
புதிய ஐபோனை வாங்குவதற்கு பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வருடமும் இந்த சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு வகை விவேகக் கைப்பேசிகள் வெளியிடு காணவுள்ளன.
முன்னதாக, புதிய ஐபோன் 15 சீரிஸ் அம்சங்கள், வடிவம், அதன் விலை விவரங்களும் இணையத்தில் பரவின. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ வகை புதிய நிறத்தில் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வகை ஐ போன் கரு நீலம், சாம்பல் நிறங்களில் வெளியீடு காணவிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இதே நிறம் கொண்ட ஐபோன் வகைகளும் ரென்டர்களும் வெளியாகியுள்ளது. ஐபோன் 15 ப்ரோ வகை டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இதே நிற வேரியண்ட் ப்ரோடோடைப் சாதனங்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக இந்த நிற வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
வடிவமைப்பைப் பொருத்தவரை ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அதன் முந்தைய ஐபோன் 14 ப்ரோ வெர்ஷனை போன்றே காட்சியளிக்கின்றன. எனினும், சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என்று தெரிகின்றது.
இந்த வகையிக் மியூட்-ஸ்விட்ச்-க்கு மாற்றாக மல்டி-ஃபன்ஷன் மியூட் பட்டன் வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படவுள்ளது.
ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் பெரிஸ்கோப் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் இந்த வகைகளில் ஏ17 சிப்செட்கள் வழங்கப்படுகிறது. இவை மேம்பட்ட செயல்திறன் மற்றும் அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- அஷ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 25, 2025, 10:23 pm
இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை
March 22, 2025, 4:55 pm
மாரடைப்பை முன்கூட்டியே 96% துல்லியமாக கண்டுபிடிக்கும் செயலி: 14 வயது சிறுவன் சாதனை
March 19, 2025, 7:56 am
9 மாதங்களுக்குப் பின் பூமியில் கால் பதித்துள்ள சுனிதா வில்லியம்ஸ் குழுவினர்
March 17, 2025, 12:32 am
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு: பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
March 1, 2025, 2:19 pm
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் இணையச் சேவையை நிறுத்தவுள்ளது
February 27, 2025, 5:06 pm
Instagram Reels - தனிச் செயலியாகலாம்
February 17, 2025, 11:38 am
'Grok 3' புதிய AI வசதியை வெளியிடவிருக்கும் எலோன் மஸ்க்
January 27, 2025, 1:50 pm
செயற்கைக் கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனுக்கு இணைய சேவை
January 21, 2025, 2:45 pm
இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்
January 18, 2025, 11:38 am