நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீன பகுதியை சீரமைக்க 1.5 கோடி டாலர் வழங்குகிறது UAE

அபுதாபி:

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் சேதமடைந்துள்ள ஜெனின் நகர அகதிகள் முகாம் பகுதியை சீரமைப்பதற்காக 1.5 கோடி டாலரை  அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் UAE முன்வந்துள்ளது.

ஐ.நா.வின் யுஎன்ஆர்டபிள்யூஏ அமைப்பிடம் 1.5 கோடி டாலர் அளிக்க ஐக்கிய அரபு அமீரக அரசு முன்வந்துள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அண்மையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின்போது வீசப்பட்ட ஏவுகணைகள், ட்டோரன் தாக்குதல்கள், தீவைப்பு சம்பவங்களால் சேதமடைந்துள்ள மேற்குக் கரை பகுதியின் ஜெனின் அகதிகள் முகாமை சீரமைக்கும் பணிகளுக்காக அந்தத் தொகையை அமீரக அரசு அளிக்கிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.

மேற்குக் கரையில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 140க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனர்கள் நடத்திய எதிர்த் தாக்குதல்களில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset