நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

ஒரு கோடி பயனர்களைக் கடந்தது திரெட்ஸ் செயலி

மென்லோ பார்க் : 

மெத்தா நிறுவனத்தின் புதிய சமூக வலைதள செயலியான திரெட்ஸ்லில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். 

திரெட்ஸ் செயலியின் சேவை துவங்கிய ஏழு மணி நேரத்தில் இந்த எண்ணிக்கையைக் கடந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

டிவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளைப் பதிவிட இயலும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டிவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.

புதிய நபர்களைப் பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இத்துடன் பாலோவர் - ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும்.

திரெட்ஸ் சேவையில் பயனர்களைப் பின் தொடரவோ மற்றும் பின் தொடராமலும் இருப்பதைச் செய்ய முடியும்.

இன்ஸ்டாகிராம் போன்றே இந்தத் தளமும், ப்ரோபைலைப் பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

- அஷ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset