நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பின்பற்றுவது ஏன் அவசியம்? - வெள்ளிச் சிந்தனை

இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் தம்முடைய வாழ்வின் அனைத்து விவகாரங்களிலும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் எந்தவிதமான தயக்கமோ, தடுமாற்றமோ இன்றி கீழ்ப்படிந்தும் அடிபணிந்தும் நடக்க வேண்டும் என்றும், மேலும், அவர்கள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்று பணிக்கப்படுகின்றார்களோ அவற்றைச் செய்ய வேண்டும் என்றும், எவற்றை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்படுகின்றதோ அவற்றை விட்டு முற்றாக விலகி இருக்க வேண்டும் என்றும் மார்க்கம் அவர்களிடம் எதிர்பார்க்கின்றது. 

இந்த வரையறைக்குள் குடும்பச் சட்டங்களும் வந்துவிடுகின்றன. இறைக்கட்டளைகளைச் செவியேற்று, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்கள்தாம் வெற்றியாளர்கள் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. இறைவன் அருள்கின்றான்:

‘இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இறைவனின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, ‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!’ என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும்.

இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். எவர்கள் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.’ (அத்தியாயம் 24 அந்நூர் 50, 51)

இறைநம்பிக்கையாளர்களுக்கிடையில் ஏதேனும் ஓர் விவகாரத்தில் கருத்து வேறுபாடோ, பூசலோ ஏற்பட்டால் அவர்கள் அவற்றை இறைவனும் இறைத்தூதரும் அருளிய போதனைகளின் - அதாவது குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் - அடிப்படையில் தீர்த்துக்கொள்ள முயல வேண்டும் என்றும் அவர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். இறைவன் அருள்கின்றான்:

‘பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை இறைவனிடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் இறைவன் மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்’ (அத்தியாயம் 4 அன்னிஸா 59)

இறைநம்பிக்கையாளர்கள் தங்களுக்கிடையிலான விவகாரங்களில் குர்ஆனையும் நபிவழியையும் நடுவராக ஆக்கிக்கொள்ளவில்லையெனில், அதற்கு மாறாக, அவற்றை தங்களின் மன இச்சைகளின்படித் தீர்த்துக்கொள்ள முயல்வார்களேயானால், அல்லது மனிதர்களால் வகுக்கப்பட்ட சட்டங்களின் உதவியை நாடுவார்களேயானால் அவர்களின் ஈமான் நம்பத்தகுந்ததல்ல.

எவர்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக - ஈமான் கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் தமக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை இறைவனும் இறைத்தூதரும் அருளிய சட்டங்களின் ஒளியில் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக மற்றவர்களிடம் போகின்றார்களோ, மற்றவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றார்களோ அவர்களை மிகமிகக் கடுமையான சொற்களைக் கொண்டு குர்ஆன் கண்டிக்கின்றது. 

அவர்களின் அந்தச் செயலை கலகச் செயலாக, அக்கிரமமாக அறிவிக்கின்றது. (பார்க்க : அத்தியாயம் 5 அல்மாயிதா 44, 45, 48).

இதனால் முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ் வருகின்ற சட்டங்களின்படிச் செயல்படுவதும், ஒருவர் மற்றவருக்கிடையில் பிணக்கோ பூசலோ வருகின்ற போது இறைச் சட்டங்களை விட்டுவிட்டு வேறு சட்டங்களின் பக்கம் போவதைத் தவிர்ப்பதும் முஸ்லிம்கள் மீது கட்டாயம் ஆகும். 

- டாக்டர் ரஜீயுல் இஸ்லாம் நத்வி

தொடர்புடைய செய்திகள்

+ - reset