நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தப்ரேஸ் அன்சாரி கொலை: 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

புது டெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019இல் நிகழ்ந்த கும்பல் கொலை சம்பவத்தில் உயிரிழந்த தப்ரேஸ் அன்சாரி வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செரைகேலா கர்சவான் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரேஸ் அன்சாரி, மகாராஷ்டிரத்தின் புணேவில் வேலைப்பார்த்து வந்தார்.

இவர் 2019இல் ரமலான் பண்டிகையொட்டி தனது சொந்த ஊருக்கு சென்றபோது மோட்டார் சைக்கிளை அவர் திருடியதாகச் சந்தேகப்பட்ட நபர்கள், அவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர்.

"ஜெய் ஸ்ரீ ராம்', "ஜெய் ஹனுமான்' எனக் கூறும்படி அன்சாரியை அவர்கள் வற்புறுத்தினர். இந்தச் சம்பவத்தையடுத்து 5 நாள்களுக்குப் பின் படுகாயங்கள் காரணமாக அன்சாரி உயிரிழந்தார்.

Jharkhand: Ten years of rigorous imprisonment for 10 in Tabrez Ansari  lynching case, Jharkhand: Ten years of rigorous imprisonment for 10 in Tabrez  Ansari lynching case

ரமலானுக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த தப்ரேஸ் அன்சாரியை அடித்தே கொன்றார்கள் 

அப்போது மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக இருந்த நிலையில், இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் சேகர் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார்.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304}இன்கீழ் குற்றவாளிகள் 10 பேருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா ரூ.15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset